குழந்தைகளை கொன்ற வழக்கில் கைதான வாலிபர் தற்கொலை
திருப்பூர்; கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த, இரு குழந்தையை கொன்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர், திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டார்.தர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 28. சேலத்தில் ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணுக்கு, இரு குழந்தைகள் இருந்தன.கடந்த ஆண்டு, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், இரு குழந்தைகளையும் வெங்கடேஷ் கொலை செய்தார். அதியமான்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடக்கிறது.ஜாமீனில் வெளியே வந்த வெங்கடேஷ் திருப்பூர், தண்ணீர்பந்தல் காலனியில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கொலை செய்த, இரண்டு குழந்தைகளும் அடிக்கடி கனவில் வருவதாக கூறி, மனமுடைந்து புலம்பி வந்தார்.கடந்த 24ம் தேதி மதியம் எலி பேஸ்ட்டை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தார். 15 வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.