உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலை கேட்டு வந்த உ.பி., சிறுமி அத்துமீறிய இளைஞர்கள் கைது

வேலை கேட்டு வந்த உ.பி., சிறுமி அத்துமீறிய இளைஞர்கள் கைது

திருப்பூர்:உ.பி., மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, வேலை தேடி, கடந்த, 31ம் தேதி காலை திருப்பூர் வந்தார். ரயில்வே ஸ்டேஷன் வெளியே நின்றிருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார், 21, என்பவர், தான் வேலை செய்யும் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாக கூறி, சிறுமியை, காங்கேயம் அழைத்து சென்றார்.அவருடன் தங்கியிருந்த நிதீஷ்குமார் யாதவ், 23, என்பவருடன் ரூபேஷ்குமார் பேசி, தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே, சிறுமியை தங்க வைத்தனர்.அன்றிரவு, 10:00 மணிக்கு, புத்தாண்டை கொண்டாட இருவரும் சிறுமியை வற்புறுத்தினர். அவர் மறுக்கவே, சிறுமிக்கு தெரியாமல், பழச்சாறில் மதுவை கலந்து குடிக்க வைத்து, இருவரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். சிறுமி கூச்சலிடவே இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், நிதிஷ்குமார் யாதவ், ரூபேஷ்குமார் ஆகியோர் மீது, 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தினர்.மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ