மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
2 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
2 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ஆடி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அரிசி பொடி, அபிஷேக பொடி, தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, விபூதி, இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமச்சிவாய' என, பக்தி கோஷம் எழுப்பியும், சிவ வாத்தியங்கள் இசைத்தும் வழிபட்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025