உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சிறுவனை மது அருந்த வைத்த நான்கு பேர் கைது

சிறுவனை மது அருந்த வைத்த நான்கு பேர் கைது

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் கோழிப்பண்ணை தொழிலாளி செந்தில்குமார், 26, கட்டட மேஸ்திரி அஜீத், 25, டிராக்டர் டிரைவர் நவீன்குமார், 21, மற்றும், 17 வயதுள்ள ஐ.டி.ஐ., படிக்கும் சிறுவன் ஆகியோர் நண்பர்கள்.கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், மாரியம்மன் கோவில் திருவிழாவில், அதே பகுதியை சேர்ந்த, 11 வயது சிறுவனை இந்த வாலிபர்கள், தனியாக அழைத்துச் சென்று, மிரட்டி, மதுவை குடிக்க வைத்து, மொபைல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.அதை சமூகவலைதளங்களில் பரவ விட்டனர். இதை கண்ட சிறுவனின் பெற்றோர், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் பெற்றோர், மோரணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், செந்தில்குமார் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை