மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
14 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
14 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காங்கிராந்தலை சேர்ந்தவர் ஜெயசுதா, 29. இவர், திருவள்ளூர் மாவட்டம், குண்டுமேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரை காதலித்து, 2019ல் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்த அவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தாய் வீட்டிற்கு வந்தார். அவருக்கு, ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான தன் தாய்மாமன் மாணிக்கம், 30, என்பவரை, 2022ல், ஜெயசுதா 2வது திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மாணிக்கம், 2022 அக்., 23ல் குழந்தை ஏனோக்ராஜ், 2, என்ற குழந்தையை கட்டையால் அடித்து, சுடுநீரை ஊற்றினார்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை 2022 நவ., 4ல் இறந்தது. ஆரணி தாலுகா போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, நேற்று முன்தினம், மாணிக்கத்திற்கு ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
14 hour(s) ago
14 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025