மேலும் செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
15 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
15 hour(s) ago
ஆரணி:ஆரணியில் அரசு டவுன் பஸ்சில் படியில் பயணம் செய்ததைக் கண்டித்த டிரைவரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய பள்ளி மாணவர்கள், பஸ்சை சேதப்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 2,000 த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி முடிந்து மாலையில் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்வதால், மாணவர் கூட்டம் நிரம்பி வழிகிறது. படியில் தொங்கிய படியும், கம்பியை பிடித்தபடியும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், ஆரணி டவுன் பஸ் ஸ்டாண்டிலிருந்து, தவணி வழியாக இஞ்சிமேடு சென்ற பஸ்சில் மாணவர்கள், அதிகளவில் படியில் தொங்கியபடி சென்றனர். பஸ் டிரைவர் அவர்களை எச்சரித்து உள்ளே வருமாறு கூறினார்.ஆத்திரமடைந்த மாணவர்கள், டிரைவரை ஆபாசமாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். மேலும், பஸ்சை அடித்து சேதப்படுத்தினர். டிரைவரும் பஸ்சை சாலை நடுவே நிறுத்தினார். கிராம மக்கள் மாணவர்களை கண்டித்தனர். இதையடுத்து மாணவர்கள் பஸ்சுக்குள் வந்தவுடன் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.
15 hour(s) ago
15 hour(s) ago