உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சாத்தனுார் அணையில் 19,500 கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனுார் அணையில் 19,500 கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனுார் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 19,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரை-யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனுார் அணை, 119 அடி உயரம் கொண்டது. தொடர் மழையால் நேற்று காலை, முழு கொள்ள-ளவை அணை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்ப-டியே உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இதன்படி காலை, 11:00 மணிக்கு, 19,500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோ-ரமுள்ள கொளமஞ்சனுார், மேல் ராவந்தவாடி, சதாகுப்பம், அல்-லப்பனுார் உள்ளிட்ட, 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடுத்துள்ளனர். * திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, 62 அடி உயர செண்பகத்தோப்பு அணை, 58 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும், 3,500 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்-பட்டு வருகிறது. இதனால் படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், ராமபுரம் உள்ளிட்ட கரையோர கிராம மக்கள், பாது-காப்பான இடங்களுக்கு செல்ல, நீர் வளத்துறை அதிகாரிகள் எச்ச-ரித்துள்ளனர். * திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில், ஜமுனாமரத்திலுள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஜவ்வாதுமலையில் தொடர் மழையால், நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கீழ் அரசம்பட்டு, கண்ணமங்கலம் உள்ளிட்ட பல பகு-திகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.* திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலை ஜலகம்பாறை நீர்வீழ்ச்-சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவால், குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ