உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளம்பெண் உட்பட இருவர் பலியாயினர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் சஞ்சீவி, 22; இவர், நேற்று முன்தினம் மாலை, காந்தப்பாளையம் வழியாக, போளூருக்கு ஹோண்டா பைக்கில் சென்றார். காந்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கவிப்பிரியா, 20; இவரது அண்ணன் மணி, 23; இவர்கள் இருவரும், ஆதமங்கலம் கிராமத்திற்கு ஹீரோ பைக்கில் சென்றனர். காந்தப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே, இருவர் சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில் ஹெல்மெட் அணியாமல் சென்ற, 3 பேரும் படுகாயமடைந்து, ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவிக்கு பின், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவிதாவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிரஞ்சீவியும் பலியாகினர். விபத்து குறித்து, கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை