உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அனுமதியின்றி காளை விடும் விழா :11 பேர் மீது போலீசார் வழக்கு

அனுமதியின்றி காளை விடும் விழா :11 பேர் மீது போலீசார் வழக்கு

போளூர் : போளூர் அருகே, அனுமதியின்றி காளை விடும் விழா நடத்திய, 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில், 2 இடங்களில், நேற்று முன்தினம் முதல், ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து காளை விடும் விழா நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக அனுமதி கேட்டு, போளூர் போலீசில் மனு அளித்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அனுமதியை மீறி, நேற்று முன்தினம் மாலை, காளை விடும் விழாவை கிராம மக்கள் நடத்தினர். இதையடுத்து, அனுமதியின்றி காளை விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த, 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை