உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காவிரி, கொள்ளிடம் கரைகளில் சிறுத்தை பீதி

காவிரி, கொள்ளிடம் கரைகளில் சிறுத்தை பீதி

கொள்ளிடம்: மயிலாடுதுறையில், ஏப்., 2ம் தேதி சிறுத்தை ஊரில் புகுந்ததாக வெளியான தகவலால் பொதுமக்கள் பீதியடைந்தனர்; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பின், அங்கிருந்து சித்தர்காடு, குத்தாலம், காஞ்சிவாய் ஆகிய பகுதிகளில் சிறுத்தையை வனத்துறையினர் தேடி வந்தனர்.அதுபோல, அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் வந்தது.இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நாகத்தி, திருவலம்பொழில் கிராமப்பகுதியில் சிறுத்தை தென்பட்டதாக அப்பகுதியினர் அளித்த தகவலின்படி, வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல், திருவலம்பொழில், கண்டியூர், நாகத்தி போன்ற பகுதிகளில், தேடினர். எனினும், சிறுத்தை தென்படவில்லை.இருப்பினும், காவிரி, கொள்ளிடம் ஆற்று படுகையில் சிறுத்தை உலா வருவதாக வெளியாகும் தகவல்களால், அப்பகுதியினர் பீதியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி