மேலும் செய்திகள்
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
26-Dec-2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
திருச்சி:திருச்சியில், அரை வட்ட சுற்றுச் சாலை பணிக்கு, நீர் நிலைகள் அழிக்கப்படுவதை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர். திருச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னத்துரை தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சின்னத்துரை கூறியதாவது:திருச்சியில், தேசிய நெடுஞ்சாலை 67ல் வயலுார் முதல் துவாக்குடி வரை உள்ள 13 ஏரி, குளங்கள் அழிக்கப்பட்டு, அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கப்படுகிறது. கொரோனா காலத்தில், அரை வட்ட சுற்றுச் சாலைகளை அமைத்து விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பெரும் தீங்கு இழைத்துள்ளனர்.திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்களிடம் மனு அளிக்கப்பட்டது. ஏரி, குளங்கள் அழிக்கப்படுவதையும், ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஏரி, குளங்களை அழித்து அமைக்கப்பட்ட சாலைகளை அப்புறப்படுத்தி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.விவசாய சங்கத்தினர் போராட்டத்தை தொடர்வதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
26-Dec-2025
16-Dec-2025 | 1