உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

ஸ்ரீரங்கம்:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு இன்று காலை, பிரதமர் மோடி வருகிறார். இதையொட்டி, திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி முழுதும், துாய்மைப் பணியாளர்களால் சுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், துாய்மைப் பணியாளர்களுக்கான உணவு, திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வண்டியில், குப்பை இருக்கும் போது நேற்று, ஸ்ரீரங்கம் அம்மா உணவகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. துாய்மைப்பணியாளர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு சென்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, துாய்மை பணியாளர்களை பலரும் வணங்கும் நிலையில் அவர்களுக்கு நாகரிகமான முறையில் உணவு வழங்க வேண்டும் என குரல் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை