மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
மணிகண்டம்:சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, தனியார் நிறுவன சொகுசு பஸ், மதுரைக்கு புறப்பட்டது. அதில், 32 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அந்த பஸ், திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த அளுந்துார் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது விபத்துக்கு உள்ளானது.வாகனங்களின் வேகத்தை குறைக்க போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்பை கவனிக்காத, ஆம்னி பஸ் டிரைவர் பிரான்கோ, 30, திடீரென பிரேக் போட்டார். கட்டுப்பாட்டை இழந்த பஸ், இடதுபுற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பஸ்சில் பயணம் செய்த, 31 பயணியர் படுகாயமடைந்தனர். அனைவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின், வேறு பஸ்சில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பலத்த காயமடைந்த மதுரையைச் சேர்ந்த ஏசுமணி, 58, என்ற பெண் மட்டும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மணிகண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Dec-2025
12-Dec-2025