உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சாரணர் இயக்க 75ம் ஆண்டு விழா திருச்சியில் ரங்கோலி ஜாலம்

சாரணர் இயக்க 75ம் ஆண்டு விழா திருச்சியில் ரங்கோலி ஜாலம்

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில், நாளை மறுதினம் முதல் பிப்., 3 வரை, பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ஜம்பூரி 75வது ஆண்டு விழா, பெருந்திரள் பேரணி நடைபெற உள்ளது. அதில், நாடு முழுதும் இருந்து, 20,000க்கும் மேற்பட்ட சாரணர் இயக்கத்தினர் பங்கேற்க உள்ளனர். அவர்களை வரவேற்கும் வகையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், ரயில்வே மெயில் சர்வீஸ் பணியாளர் 30 பேர் சேர்ந்து, ஐந்து மணி நேரத்தில் பிரமாண்டமான ரங்கோலி கோலம் போட்டு அசத்தியுள்ளனர். ஜங்ஷன் ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே, பல்வேறு வண்ணங்களால் பேரணி நிகழ்வு வாசகங்களுடன் ரங்கோலி கோலம் போட்டுள்ளனர். ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணியர், ரங்கோலியை ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை