மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி, 51, விவசாய கூலி.இவரது தங்கை காந்திமதி, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். மணப்பாறை அருகே செட்டி சித்திரம் கிராமத்தில், 1,200 சதுரடி காலி மனையை வையாபுரி, தங்கைக்கு வாங்கிக் கொடுத்தார்.அவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஆவணங்கள் ஆன்லைன் வாயிலாக சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.வையாபுரியை போனில் அழைத்து பேசிய சமுத்திரம், வி.ஏ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் சித்தாநத்தம் வி.ஏ.ஓ., சிவசெல்வகுமார், 41, பட்டா பெயர் மாற்றத்திற்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.வையாபுரி தயங்கியதால், '1,000 ரூபாயாவது கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும்' என, வி.ஏ.ஓ., கண்டிப்புடன் கூறினார்.தர விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான போலீசார், சிவசெல்வகுமார் நேற்று, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது, கையும், களவுமாக கைது செய்தனர்.
14-Dec-2025
12-Dec-2025