மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் இருந்து, மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த விமான பயணியரின் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, 47, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 46, ஆகியோர் பிறந்த தேதியில் திருத்தம் செய்து பாஸ்போர்ட் பெற்றிருப்பதை கண்டுபிடித்தனர். அதுபோல, சிங்கப்பூரில் இருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜி, 33, என்பவர் பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்து, விமானப்பயணம் செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்த குடியுரிமை பிரிவு அதிகாரிகள், மூன்று பேரையும் விமான நிலைய போலீசில் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். போலீசார், அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.
14-Dec-2025
12-Dec-2025