| ADDED : ஆக 23, 2011 01:10 AM
துறையூர்: துறையூர் சட்டசபை தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு தெரு முனை பிரச்சார கூட்டம் எரகுடியில் நடந்தது. தேர்தலில் தொகுதி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெங்கராஜ் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சபாபதி, பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட செயலர் மாராடி நடராஜ், மனோகர்ராஜன் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் ராஜமாணிக்கம், சுப்ரமணி வரவேற்றனர். கூட்டத்தில் பிரச்சார பிரிவு மாநில தலைவர் ஈரோடு சரவணன், கோட்ட பொறுப்பாளர் திருமலை, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் பேசினர். கூட்டத்தில் துறையூர் நகர நிர்வாகிகள் குமார், அழகேசன், கதிரேசன், குமரேசன், சம்பத்குமார், நடராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ராஜசிதம்பரம், செல்வராஜ், சின்னத்தம்பி, முருகேசன், உப்பிலியபுரம் நிர்வாகிகள் சதீஷ், தர்மன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் உட்பட பா.ஜ., கட்சியினர் பங்கேற்றனர். இளைஞரணி தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.