உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி மத்திய சிறை எஸ்.பி., "டிரான்ஸ்ஃபர்

திருச்சி மத்திய சிறை எஸ்.பி., "டிரான்ஸ்ஃபர்

திருச்சி: திருச்சி மத்திய சிறை சூப்பிரடெண்ட் மற்றும் ஜெயிலர் ஆகிய இருவரும் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை சூப்பிரடெண்டாக இருப்பவர் பழனி. இவர் பொறுப்பேற்றது முதல் சிறையில் தொடர்ந்து கைதிகள் தற்கொலை, கைதிகளுக்குள் மோதல், கஞ்சா, மொபைல் கடத்தல் அதிகரிப்பு என்று பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதைத்தடுக்க சூப்பிரடெண்ட் பழனியும் பல்வேறு புதிய முறைகளை கையாண்டும் எதும் பலனளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சிறைத்துறை நிர்வாகம் பழனியை புதுக்கோட்டை மாவ ட்ட சிறைக்கு சூப்பிரடெண்டாக பணியிட மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், நிர்வாக வசதிக்காக திருச்சி மத்திய சிறையில் ஜெயிலராக பணியாற்றிய மாரியப்பன் திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு ஜெயிலராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை