உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அ.தி.மு.க., வேட்பாளர் ஆதரவு திரட்டல்

அ.தி.மு.க., வேட்பாளர் ஆதரவு திரட்டல்

திருச்சி: திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்ஜோதி, தென்னூர் அரசமரத்தடியில் இருந்து கட்சியினரிடம் ஆதரவு திரட்டும் சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராகவும் பதவியேற்ற மரியம்பிச்சை பெரம்பலூர் அருகே நடந்த சாலைவிபத்தில் பலியானார். இதன் காரணமாக, திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்., 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., வேட்பாளராக, முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக, திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன்பின், மேற்கு தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் பணியை கடந்த 18ம் தேதி துவக்கினார்.

தென்னூர் அரசமரத்தடியில் இருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து, ஜெனரல் பஜார், புத்தூர் வண்ணாரப்பேட்டை என வார்டு வாரியாக ஆதரவு திரட்டினார். ஜங்ஷன் பகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு, அண்டகொண்டான், பீமநகர், ஜங்ஷன், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.ச* அமைச்சர் ஒத்துழைப்பு: தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் பரஞ்ஜோதியுடன், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதியும் இணைந்து, கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.* மரியம்பிச்சை வீட்டில்: மறைந்த அமைச்சர் மரியம்பிச்சை வீட்டுக்கு நேற்று சென்ற பரஞ்ஜோதி, தேர்தலில் ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்தார். அப்போது, அமைச்சர் சிவபதி, மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன், எம்.பி., குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை