உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கட்டுமான நலவாரியத்தில் 37 லட்சம் பேர் ப

கட்டுமான நலவாரியத்தில் 37 லட்சம் பேர் ப

'கட்டுமான நலவாரியத்தில் 37 லட்சம் பேர் பதிவு'வேலுார், :''கட்டுமான நலவாரியத்தில், 37 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்,'' என, மாநில தலைவர் பொன் குமார் கூறினார்.வேலுாரை அடுத்த அப்துல்லாபுரத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில், தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு அறிவித்த பட்ஜெட்டில், கட்டுமான தொழிலாளர்கள், 40 வயது நிரம்பியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்கள் சிகிச்சை பெற மருத்துவ அட்டை வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஏழு மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் ஐ.டி.ஐ., படிக்க நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கையின் போது, தொழிலாளர்களுக்கு பயனுள்ள நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறோம். கட்டுமான நலவாரியத்தில், 37 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ