உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / தாக்கப்பட்ட வேலுார் கைதி சேலம் சிறைக்கு மாற்றம்

தாக்கப்பட்ட வேலுார் கைதி சேலம் சிறைக்கு மாற்றம்

வேலுார்:கிருஷ்ணகிரி மாவட்டம்,மாணிக்கம்கோட்டையைச்சேர்ந்தவர் சிவக்குமார், 30. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். வேலுார் சிறைத்துறை டி.ஐ.ஜி., வீட்டில் வீட்டு வேலைகளை செய்ய, சென்ற போது, 4.50 லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்களை திருடியதாக சிறை வார்டன்கள் மூன்று பேர் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.சிவகுமாரின் தாய், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதிகள், வேலுார் முதன்மை குற்றவியல் நீதிபதி நேரடியாக சிறைக்கு சென்று விசாரித்து, சிவகுமாரிடம் வாக்குமூலம் பெற உத்தரவிட்டனர்.வேலுார் முதன்மை குற்றவியல் நீதிபதி விசாரித்து, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, சிறைத்துறை அலுவலர் மூன்று பேர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சிவகுமார் வேலுார் சிறையிலிருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை