மேலும் செய்திகள்
பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
18 minutes ago
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
வேலுார்:''அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பதிவு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வேலுார் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி., அருள்சாமி எச்சரித்தார்.தமிழக பதிவுத்துறையில் பணியாற்றும் சார் - பதிவாளர், பத்திரப்பதிவுத்துறை அலுவலர்களுக்கு, 3 மாதத்திற்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி நடத்தப்படுகிறது. அதன்படி வேலுாரில், வேலுார் பத்திரப்பதிவு மண்டலத்திற்கு உட்பட்ட, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் செய்யாறு ஆகிய, 5 பதிவு மாவட்டங்களிலுள்ள, 45 சார் - பதிவாளர்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது.வேலுார் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி., அருள்சாமி தலைமை வகித்து பேசியதாவது:பத்திரப்பதிவின் போது காலதாமதம் ஏற்படாத வகையிலும், பதிவு செய்த பத்திரங்களை அன்றைய தினமே பொதுமக்களிடமும் வழங்க வேண்டும். வில்லங்க சான்று, 3 நாட்களிலும், ஆவண நகலை ஒரே நாளிலும் வழங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும், நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட ஆவணங்களையும் பதிவு செய்யக்கூடாது. அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடமிருந்து புகார் வராதபடியும், போலி ஆவணங்களுடன் வரும் பத்திரங்களையும் பதிவு செய்யக்கூடாது. பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் சிட்டா, அடங்கல், வாடகை மதிப்பு சான்றிதழ், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
18 minutes ago
03-Oct-2025
02-Oct-2025