உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  பாறை ஓவியங்களை பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை

 பாறை ஓவியங்களை பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை

குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சென்றாயன்பள்ளியில், கோழிக்கொண்டை மலை உள்ளது. இந்த மலையின் கிழக்கு பகுதியில் உள்ள பெரிய பாறை அருகே சிறிய குகை உள்ளது. இந்த பாறையில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய, 20க்கும் மேற்பட்ட வெண் சாந்து ஓவியங்கள் உள்ளன. குறிப்பாக இரு கைகளால் வீரன் காளையின் திமிலை அடக்குவது போன்ற ஓவியம் உள்ளது. வட ஆற்காடு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு குறித்து கிடைத்துள்ள ஓவியங்களில் இது குறிப்பிடத்தக்கது. இதன் வரலாற்று பெருமைகளை அறியாமல், சிலர் தங்கள் பெயர்களை பாறையில் கிறுக்கி வைத்துள்ளனர். இதை பாதுகாக்க, தொல்லியல் துறை சார்பில் அந்த குகை ஓவியங்கள் உள்ள பகுதியில் வேலியிட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை