| ADDED : ஜன 18, 2024 02:07 PM
வேலுார் : வேலுார் மத்திய சிறையின், உதவி ஜெயிலர் துாக்கிட்டு தற்கொலை கொண்டார். வேலுார் அடுத்த இடையான்சாத்து கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன், 59; இவர், வேலுார் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தார். இருதய நோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆகிய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி அளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.