மேலும் செய்திகள்
எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி
2 hour(s) ago
பரிசு அனுப்புவதாக கூறி மாணவனிடம் பணம் பறிப்பு
13-Nov-2025
பெண் டாக்டரை மிரட்டி ரூ.83 லட்சம் அபேஸ்
13-Nov-2025
வேலுார்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக செஞ்சி ஊராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர் அன்பு நேற்று பொறுப்பேற்றார். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில், முதல் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பொறுப்பேற்றார். வேலுார் மாவட்டம், செஞ்சி ஊராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலராக நியமிக்கப்பட்டவரை, பதவி பிரமாணம் எடுக்க விடாமல், கம்யூ., பஞ்சாயத்து தலைவர் தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. செஞ்சி மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் அன்பு, வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்த செய்தி, 'நம் நாளிதழில்' நேற்று வெளியானது. இதையடுத்து வேலுார் ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் திருமால் தலைமையிலான அதிகாரிகள் செஞ்சி கிராம ஊராட்சியில் நேற்று ஆய்வு செய்தனர். பின், நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில், மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் அன்பு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
2 hour(s) ago
13-Nov-2025
13-Nov-2025