உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / உழைப்பு, இரக்க குணத்திற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது

உழைப்பு, இரக்க குணத்திற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது

வேலுார் : ''விஜயகாந்திற்கு, 'பத்ம பூஷண்' விருது அவரது உழைப்பு மற்றும் இரக்க குணத்திற்கு கிடைத்தது,'' என, புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம் கூறினார்.வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் நடந்த, புதிய நீதிக்கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:இளையராஜா தமிழகத்தின் பொக்கிஷம். அவரின் குடும்பத்தில் நானும் ஒருவன். அவரது மகள் பவதாரிணி, இளம் வயதிலேயே காலமானது அதிர்ச்சியாக உள்ளது. இசை குடும்பத்திற்கே ஒரு பெரிய இழப்பு. மகள் மீது அளவு கடந்த பாசம் கொண்ட இளையராஜாவுக்கு, இதை தாங்கி கொள்ளும் சக்தியை ஆண்டவன் தர வேண்டும். மறைந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, மத்திய அரசு, பத்ம பூஷண் விருது அறிவித்துள்ளது. இது, அவர் உழைப்பு, இரக்க குணத்திற்கு கிடைத்தது. இந்த விருது அறிவித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விஜயகாந்த் மீது பிரதமர் மோடிக்கு, எப்போதும் அளவற்ற பாசம் உண்டு. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை