உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  மாடியில் இருந்து வீடியோ எடுத்து அபராதம் விதிக்கும் போலீஸ்

 மாடியில் இருந்து வீடியோ எடுத்து அபராதம் விதிக்கும் போலீஸ்

சத்துவாச்சாரி: உயர்ந்த மாடிகளில் அமர்ந்து, சாலையில் செல்லும் ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலுார், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே, இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய கோ ரிக்கை கையெழுத்து இயக்கம் நடந்தது. மாநிலத் தலைவர் மணலி மனோகர் தலைமை வகித்தார். பின், அவர் அளித்த பேட்டி: கடந்த, 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆட்டோக்கள் சாலையில் செல்லும் போது, உயர்ந்த மாடிகளில் அமர்ந்து, போலீஸ் அதிகாரிகள் ஆட்டோவை வீடியோ எடுத்து, டிஜிட்டல் அபராதம் விதித்து, வழக்கு பதிவு செய்கின்றனர். இலவச பேருந்து விடப்பட்டதால், ஆட்டோவில் வர பொதுமக்கள் தயங்குகின்றனர். ஆட்டோ டிரைவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என நுாதன வழக்கு பதிவு செய்கின்றனர். இதற்கு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை