உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / காலாவதியான கல்குவாரியை நடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

காலாவதியான கல்குவாரியை நடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

வேலுார் : ''காலாவதியான கல்குவாரியை யார், எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தினாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், பொன்னையிலிருந்து, சென்னைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:காலாவதியான கல்குவாரியை, யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தினாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதியான கல்குவாரியை மூட, கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ராமர் ஆலய கும்பாபிஷேகத்தில், தமிழகத்தில் ஆலயங்கள் பூஜை நடத்த தடைவிதிப்பதாக, மத்திய அமைச்சர் கூறுவது உண்மையில்லை. உண்மைக்கு மாறாக மத்திய அமைச்சர் கூறுவது அழகல்ல. பொன்னை தடுப்பணை கட்ட, டெண்டர் முடிந்து பணிகள் துவங்கபட உள்ளது. மேல் அரசம்பட்டு அணைக்காக ஆய்வு செய்ய, 44 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை