உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ஒரு நிலத்தை பலருக்கு விற்று மோசடி : ரூ.100 கோடி மதிப்புக்கு முறைகேடு

ஒரு நிலத்தை பலருக்கு விற்று மோசடி : ரூ.100 கோடி மதிப்புக்கு முறைகேடு

வேலூர்: ஏலகிரி மலையில், ஒரு மனையை பலருக்கு விற்று, 100 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ளது ஏலகிரி மலை. சிறந்த கோடை வாசஸ்தலமான இங்கு, சென்னை, பெங்களூரு, சேலம் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, கனடாவில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஏலகிரி மலையில் நிலம், பிளாட் வாங்கியவர்கள் உடனடியாக வீடுகள் கட்ட மாட்டார்கள். பலர் காம்பவுண்ட் சுவர் மட்டும் கட்டி விடுவர். இங்குள்ள நில புரோக்கர்கள் காலியாக உள்ள நிலம், காம்பவுண்ட் கட்டி, வீடுகள் கட்டாமல் உள்ள நிலத்தின், உரிமையாளர்கள், அவர்கள் யாரிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளனர் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு, உரிமையாளர்கள் தங்கள் பெயருக்கு பவர் ஆஃப் பட்டா கொடுத்து விட்டதாக, போலியாக ஆவணங்கள் தயாரித்து பதிவு செய்கின்றனர். பவர் ஆஃப் பட்டா மூலம், அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்கின்றனர். இது போல, ஒருவருக்கு விற்ற நிலத்தை, 10 முதல் 25 பேர்களுக்கு தனித்தனியாக, போலி பட்டா தயாரித்து விற்றுள்ளனர். கந்தசாமி என்பவரிடம் ஏலகிரியில், 12 கோடி ரூபாய் நில மோசடி செய்ததாக சில தினங்களுக்கு முன், ஏலகிரி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவருமான நிலாவூர் ராஜுவை போலீஸார் கைது செய்தனர். நில மோசடி குறித்து விசாரிக்க சென்ற போலீஸாருக்கு, மேலும் பல மோசடிகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த கருணாநிதி குடும்பத்தினருக்கு சொந்தமான, 11.47 ஏக்கர் நிலம், ஏலகிரிமலை அத்னாவூர் அருகே ராயநேரி பகுதியில் உள்ளது. பூர்விகச் சொத்தான இந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு, 17 கோடி ரூபாய். ராஜுவும், அவரது உறவினர்கள் சின்னக்காளி, கோவிந்தன், ரவி ஆகியோர் சேர்ந்து போலியான ஆவணங்கள் தயாரித்து, கருணாநிதியின் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயரில் மாற்றிக்கொண்டனர். அந்த நிலத்தை சென்னை, பெங்களூருவை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு நிலத்தையை, பலருக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. நிலாவூர் ராஜுவைப் போல ஏலகிரிமலையில் உள்ள, 25க்கும் மேற்பட்ட நில புரோக்கர்கள் மோசடி செய்து நிலங்களை விற்பனை செய்துள்ளதும், 100 கோடி ரூபாய் மதிப்புக்கு இங்கு நில மோசடி நடந்திருப்பதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை