உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மழையால் பாதித்த பகுதியை சீரமைக்க நீர்வளத்துறைக்கு ரூ.2,000 கோடி தேவை

மழையால் பாதித்த பகுதியை சீரமைக்க நீர்வளத்துறைக்கு ரூ.2,000 கோடி தேவை

வேலுார் : ''தமிழகத்தில், சமீபத்தில் பெய்த கனமழையால், நீர்தேக்கங்கள், ஏரி, குளம், அணை போன்ற, 720 இடங்களில், சேதங்களும், உடைப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதை சரிசெய்ய, நீர் வளத்துறைக்கு மட்டும், 2,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலுாரில், தி.மு.க., மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடந்த செயற்குழுவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக கவர்னர் ரவி, எல்லா விவகாரங்களிலும் ஏட்டிக்கு போட்டியாக தான் செயல்படுவார். அந்த வகையில், சேலம், பெரியார் பல்கலை துணை வேந்தரை சந்தித்ததும். அதில் ஒன்றும் புதியதாக இல்லை. தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால், நீர்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் வாய்க்கால்கள், அணைகள் போன்றவைகள், 720 இடங்களில், சேதங்களும், உடைப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதை, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இரண்டு நாட்களில் சேதங்களின் முழு விபரமும் கிடைத்து விடும். இதை அறிக்கையாக வெளியிட உள்ளேன். தற்போது, அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த வகையில், இவற்றை சரிசெய்ய, நீர் வளத்துறைக்கு மட்டும், 2,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பொன்முடி, நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து உச்சநீதிமன்றம் விலக்களித்துள்ளது வரவேற்கதக்கது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்