உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மரக்காணம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மரக்காணம் : மரக்காணம் ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (14ம் தேதி) நடக்கிறது. மரக்காணம் சன்னதி வீதியில் உள்ள அழகுமுத்துமாரியம்மன், ஐயப்பன், துர்க்கையம்மன், நாகராஜசுவாமி கோவில்கள் உள் ளன. இன்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத் துடன் விழா துவங்குகிறது. மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், முதல் கால யாக பூஜை, இரவு 10 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தன சமர்ப்பணம் நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி