உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முண்டியம்பாக்கத்தில் மனுநீதி நாள் முகாம்

முண்டியம்பாக்கத்தில் மனுநீதி நாள் முகாம்

விழுப்புரம் : முண்டியம்பாக்கத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சாந்தி கருணாகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஜவகர் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ரவிசங்கர் வரவேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகம் கலந்து கொண்டு 130 மனுக்களை பெற்று உடனடி தீர்வாக 14 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ., ராமமூர்த்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: மக்களுடைய குறைகளை தீர்க்க அதிகாரிகள் மக்களிடம் நேரடியாக வந்து மனுநீதி முகாம்களை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றனர். தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. மக்களை மீறி அரசும், அதிகாரிகளும், நானும் எதுவும் செய்ய முடியாது. மக்கள் தங்கள் குறைகளை தெளிவாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தால் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும். விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை துறை மூலம் நல்லபல மானிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது பற்றி பல விவசாயிகளுக்கு தெரியவில்லை. அதிகாரிகள் அரசின் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் மனுநீதி நாட்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறேன். இவ்வாறு ராமமூர்த்தி எம்.எல்.ஏ., பேசினார். தாசில்தார்கள் மணி, சேகர், மண்டல துணை தாசில்தார் சகாயமேரி, வருவாய் ஆய்வாளர் ரவிசங்கர் ,வி.ஏ.ஓ.,க்கள் சேதுராமன், மாறன், முருகையன்,தேவநாதன், ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை