உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் எஸ்.ஐ.,யை மிரட்டிய ரவுடி உட்பட 2 பேர் கைது

பெண் எஸ்.ஐ.,யை மிரட்டிய ரவுடி உட்பட 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் பெண் சப் இன்ஸ்பெக்டரை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்த ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அறிவு (எ)அறிவழகன், 38; பிரபல ரவுடி. இவர் மீது கொலை, நாட்டு வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, தகராறு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர், விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் குற்ற சரித்திர படிவேடு பட்டியலில் உள்ளார்.இவரிடம் நேற்று விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்தனர். அப்போது, அறிவழகன், அவரது நண்பரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அடுத்த காந்திபுரம் ஜோதி (எ) பார்த்திபன், 31; ஆகியோர், 'நாங்கள் யார் தெரியுமா, எங்களையே விசாரணை செய்ய வருகிறீர்களா' எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில், அறிவழகன், ஜோதி ஆகியோர் மீது அரசு பணி செய்யவிடாமல் த டுத்தல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை