உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது

திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஆன்லைனில் லாட்டரி தொழிலில் ஈடுபட்ட சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து, கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் - சென்னை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஸ்விப்ட் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆன்லைன் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.விசாரணையில், திண்டிவனம், காவேரிப்பாக்கம், புதுதெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் அஜித்குமார், 27; சந்தானம், 25; மற்றும் அதே பகுதி, சின்ன வீரராகவன் தெருவைச் சேர்ந்த குப்பன் மகன் சரத்குமார், 29; என தெரியவந்தது.உடன் 3 பேரையும் கைது செய்து, ஸ்விப்ட் கார், இரண்டு மொபைல்போன் மற்றும் ஒரு கே.டி.எம்., பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ