உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

மரக்காணத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

மரக்காணம்: மரக்காணம் கடற்கரையில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதியில் அவ்வப்போது டால்பின்கள் மற்றும் கடல் ஆமைகளும் கூட்டம் கூட்டமாக கரை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் டால்பின்கள் மற்றும் கடல் ஆமைகளும் விசைப்படகுகளில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்குவது தொடர்கதையாக உள்ளன.இந்நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் நேற்று காலை 60 கிலோ எடையுள்ள டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவலறிந்த வனத்துறையினர், இறந்த டால்பினை உடற்கூறாய்வு செய்து, கடற்கரை பகுதியிலேயே புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை