மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
4 hour(s) ago
விழுப்புரம், : விழுப்புரத்தில் நகர மற்றும் வளவனுார் பேரூர் தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார்.அவை தலைவர் ஜெயச்சந்திரன், லட்சுமனண் எம்.எல்.ஏ., பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், துணை செயலாளர்கள் முருகன், இளந்திரையன், நகர துணை செயலாளர் கற்பகம், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி, வளவனுார் பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா வரவேற்றனர்.அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். இதில், விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளரை நியமனம் செய்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி தலைவர் உதயநிதிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி நிர்வாகிகள் பணியாற்றுவது பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்சலாம், செல்வராஜ், பாஸ்கரன், பொதுக்குழு பஞ்சநாதன், சம்பத், வாசன், ராஜசேகர், இளங்கோவன், பக்தவத்சலம், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago