மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
8 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
8 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
8 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
8 hour(s) ago
விழுப்புரம்: கடலுார் மாவட்டம், நல்லுாரைச் சேர்ந்தவர் ராம்கோபால் பட்நாயக். தனியார் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக உள்ளார். இவர், கடந்த 18ம் தேதி பிச்சாவரத்திற்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றபோது, பல லட்சம் மதிப்புள்ள தங்க நகை, பணத்துடன் கூடிய கைப்பையை தவறவிட்டு, ஊருக்கு திரும்பினர்.இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா தளத்தில் பணிபுரியும் பெண் வனக்காவலர் சரளா, அங்குள்ள கண்காணிப்பு கோபுர வளாகத்தில் கிடந்த அந்த பையை கண்டெடுத்தார். அந்த பையில் இருந்த உரிமையாளரின் தொடர்பு எண்ணில் தகவல் தெரிவித்து, அவர்களை நேரில் அழைத்து பையை ஒப்படைத்தார். வனக்காவலர் சரளாவின் பணியை பாராட்டி அவருக்கு, நேற்று விழுப்புரம் வனத்துறை மண்டல தலைமை அலுவலகத்தில், 2 கிராம் தங்க நாணயத்துடன், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, காலநிலை மாற்றத் திட்ட இயக்குநர் தீபக்பில்கி, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், வனசரக அலுவலர்கள் கமலக்கண்ணன், புவனேஷ், இக்பால் உள்ளிட்டோர், வனக்காவலர் சரளாவை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago