உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திண்டிவனம் அடுத்த வீடூர், ஆனந்தம்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 29; கூலித் தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 8ம் தேதி மாலை 6:00 மணியளவில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.இதனால், மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி