உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேவாலயங்களில் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன்

தேவாலயங்களில் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன்

திண்டிவனம், விழுப்புரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜிக்கு திண்டிவனத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் அர்ஜூனன் எம்.எல்.ஏ., நேற்று காலை நேரில் சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ., சர்ச் செயலாளர் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்குமாறு எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்தார்.இதேபோல் மரக்காணம் சாலையில் ஏ.ஜி.சர்ச், கிடங்கல் (2) புனித வியாக்குல அன்னை தேவலாயம், கிடங்கல் (1) சர்ச் ஆகிய இடங்களுக்கு சென்று, சிறப்பு பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வந்த கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டினார்.அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் வடபழனி, திண்டிவனம் நகர ஜெ., பேரவைச் செயலாளர் ரூபன்ராஜ், பாசறை செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், கார்த்திக், ஐ.டி., பிரிவு சவுகத் அலி, கவுன்சிலர் ஜனார்த்தனன், முன்னாள் நகர வங்கி தலைவர் செல்வம், வழக்கறிஞர் செந்தில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகிகள் ரவி, பன்னீர்செல்வம், கிளைச் செயலாளர் நரேந்திரகுமார், மருத்துவர் அணி இணை செயலாளர் கோகுல்கிருஷ்ணராஜ், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை