உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் பள்ளி பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் பள்ளி பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 10ம் வகுப்பு பொது தேர்வில் மாணவி -சாலினி 500க்கு 491 மதிப்பெண்ணு, பவித்ரா 490 , தருண் 480 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கணக்கில் 11 மாணவர்களும், அறிவியலில் 5 பேர், சமூக அறிவியலில் 2 பேர் 100 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்தனர். பிளஸ் ௨ பொதுத்தேர்வில் மாணவி பிரதீபா 600க்கு 561 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடமும், மாணவி தமிழ்வாணி 559 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடமும், மாணவி அகிலா 556 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடமும் பிடித்தனர். கணிதம், கணினி அறிவியல் பாடத்தில் தலா 2 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தாளாளர் தெரேஸ்நாதன் பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் கிரீன்மேரி குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை