உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா

சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா

திண்டிவனம் : திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்திலுள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லுாரியில் நடந்த ஆண்டுவிழாவிற்கு, கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். கல்லுாரியின் நிர்வாக அலுவலர் சிவா வரவேற்றார். மருத்துவர் ராமதாசு கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) சிங்காரவேல், ஆண்டு விழா தொடர்பாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லுாரியின் பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ