உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் விழிப்புணர்வு முகாம்

திண்டிவனத்தில் விழிப்புணர்வு முகாம்

மரக்காணம் : திண்டிவனம் மத்தியஸ்த மையம் சார்பில் மத்தியஸ்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.மொளசூர் கிராமத்தில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். 'மத்தியஸ்தை நோக்கி பயணம்' தலைப்பில் மத்தியஸ்தர்கள் பாலசந்திரன் 'நிலத்தகராறு தீர்வுகள்' தலைப்பிலும், கிருபாகரன் 'வங்கி கடன் காசோலை மோசடி' பற்றியும், பாலசுப்ரமணியன் 'குடும்ப பிரச்னைகளுக்கான தீர்வுகள்' பற்றியும், சிவசுப்ரமணியம் 'தொழிலாளர் பிரச்னை தீர்வுகள்' குறித்தும் சிறப்புரையாற்றினர். மத்தியஸ்த சார்பு மையம் சிறப்பு பற்றி நீதிபதிகள் தனலட்சுமி, மகாலட்சுமி, ரஹ்மான் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி கூறினர். ஊராட்சி மன்ற துணை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை