உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலமுத்து மாரியம்மன் கோவில்  செடல் திருவிழா 

பாலமுத்து மாரியம்மன் கோவில்  செடல் திருவிழா 

வானுார் : வானுார் அடுத்த மாட்டுக்காரன் சாவடி பாலமுத்து மாரியம்மன் கோவிலில் 16ம் ஆண்டு செடல் திருவிழா நடந்தது.விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. அன்று, ஒண்டி அய்யனாரப்பன் கோவிலில் பொங்கலிட்டு படையல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு செடல் உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை 10:;00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாட்டுக்காரன் சாவடி ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ