உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுவனுக்கு பாலியல் தொற்று பெண் மீது பாய்ந்தது போக்சோ

சிறுவனுக்கு பாலியல் தொற்று பெண் மீது பாய்ந்தது போக்சோ

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொற்று பாதிப்பு ஏற்பட காரணமான பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 7ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. அதில் சிறுவனுக்கு கண்ணில் கட்டி இருந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.அதன்படி, பெற்றோர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு பால்வினை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனிடம் விசாரித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தன்னை ஒரு பெண், அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், பெண் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்