உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தில், வடகுச்சிப்பாளையம் சாலையில் வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை 7:00 மணியளவில் அர்ச்சகர் ரமேஷ் பூஜை செய்ய வந்தபோது, உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசில் வழக்குப் பதிந்து, உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ