உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து எரளூர் ஊராட்சியில் பிரசாரம்

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து எரளூர் ஊராட்சியில் பிரசாரம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே விழுப்புரம் தனி தொகுதி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து எரளூர் ஊராட்சி தலைவர் வெங்கடாஜலபதி தலைமையில் அக்கிராம இளைஞர்கள் ஓட்டு சேகரித்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த எரளூர் ஊராட்சியில் விழுப்புரம் லோக்சபா தனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ் ஆதரித்து ஊராட்சி தலைவர் வெங்கடாஜலபதி தலைமையில் கிராம இளைஞர்கள் அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சிறப்பு திட்டங்களை உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குப்பம்மாள், இளைஞர் பாசறை கிளை செயலாளர்கள் கருணாநிதி, செல்வம், ஏழுமலை, சவுரியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர் கல்வி, மற்றும் கிராம இளைஞர்கள் உட்பட பல பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி