உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டு எண்ணும் மையத்தில் திடீர் கோளாறு தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் கடிதம்

ஓட்டு எண்ணும் மையத்தில் திடீர் கோளாறு தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் கடிதம்

விழுப்புரம், - விழுப்புரம் ஓட்டு எண்ணும் மையத்தில் யு.பி.எஸ்., பழுதான் கண்காணிப்பு கேமரா காட்சி தெரியாமல் போனது குறித்து வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது குறித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியை சந்தித்த பின், ரவிக்குமார் எம்.பி., கூறியதாவது:விழுப்புரம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைகளில், இன்று காலை 9:30 மணியளவில் திடீரென கண்காணிப்புக் கேமராக்கள் நின்று விட்டதாகவும், அவை சரி செய்யப்பட்டு காலை 10:00 மணிக்கு மீண்டும் ஓடத்தொடங்கியதாகவும், மையத்தில் உள்ள வி.சி., முகவர் அய்யப்பன், தகவல் தெரிவித்தார்.மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்.பி., விரைந்து வந்து, அங்குள்ள அதிகாரியை அழைத்து, மின்னழுத்தத்தை சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். அதில் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தியதாகவும், பிறகு முகவர்களை அழைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாதுகாப்பு அறைக்கும் சென்று பார்வையிட்டதாக, அய்யப்பன் தெரிவித்தார்.அங்குள்ள யு.பி.எஸ்., சாதனம் பியூஸ் போனதால், மின் தடை ஏற்பட்டதாகவும், இனி அவ்வாறு நேராமல் தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இந்த விபரங்களை, வி.சி., தலைவர் திருமாவளவன், அமைச்சர் பொன்முடி ஆகியோரிட் தெரிவித்துள்ளேன். அவர்களது வழிகாட்டுதலின்படி, தேர்தல் துறைக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளேன்.பாதுகாப்பு குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 2015ம் ஆண்டில் அறிவுறுத்தியதையும் நான் மேற்கோள்காட்டி, அதனை செயல்படுத்தவும் கடிதம் அனுப்பியுள்ளேன்.கலெக்டர் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். எவ்வித அச்சமும், சந்தேகமும் கிடையாது. தொடர்ந்து, பாதுகாப்பு சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை