உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., மாநில தலைவரை வேட்பாளர் சந்திப்பு

பா.ம.க., மாநில தலைவரை வேட்பாளர் சந்திப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபா.ம.க., வேட்பாளர் மாநில தலைவர் அன்புமணியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தேர்தலில் 56,296 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். நேற்று முன்தினம் காலை சென்னையில், மாநில தலைவர் அன்புமணி மற்றும் பசுமை தாயக தலைவர் சவுமியா ஆகியோரை நேரில் சந்தித்து, தேர்தலில் பணியாற்றியதற்காக வேட்பாளர் அன்புமணி நன்றி தெரிவித்தார்.மாவட்ட தலைவர் தங்கஜோதி, அமைப்பாளர்கள் பழனிவேல், மணிமாறன், நகர செயலாளர் விஜயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி