உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 33; இவரது சகோதரர் காசிநாதன். இருவருக்குமிடையே நிலம் பாகம் பிரிவினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.கடந்த மாதம் 27ம் தேதி காலை 9:00 மணியளவில் இருவருக்குமிடைய நிலம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.அப்போது காசிநாதன், ராமச்சந்திரன், ராஜா ஆகிய மூன்று பேர் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர்.வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் காசிநாதன், ராமச்சந்திரன், ராஜா ஆகிய 3 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை