உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் காரில் உரசியதை தட்டிக்கேட்ட தம்பதியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, 42; இவரது மனைவி தங்கம், 39; இருவரும் காரில், வழுதரெட்டி காமன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர்.அப்போது, பின்னால் பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், அஜித்குமார், சங்கர் ஆகியோர், காரை முந்திச் சென்றபோது, காரின் வலதுபுறத்தில் உராய்ந்து, காரில் சிராய்ப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, இளையராஜாவும், தங்கமும் தட்டிக் கேட்டபோது, அவர்களை ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து தங்கம் அளித்த புகாரின் பேரில், ராஜ்குமார், அஜித்குமார், சங்கர் ஆகிய 3 பேர் மீதும், தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை